தமிழ் செய்திதாட்களை மொபைலில் படிக்க.

Submitted by Karthikeyan on

நியூஸ் ஹண்ட் ஆப் டெய்லி ஹண்ட் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நியூஸ் ஹண்ட் பழைய செயலியில் கிடைத்த மின் புத்தகங்கள், வார, மாத இதழ்கள் மற்றும் மின் செய்தித்தாட்கள் தற்போது கிடைப்பதில்லை. மேலும் அதில் வரும் செய்தி தலைப்புகள் தவறான தூண்டுதலாக இருப்பதால் நாங்கள் இதனை ஆதரிப்பதில்லை

 எடெர்னோ இன்ஃபோடெக் (Eterno Infotech)  நிறுவனத்தின் தயாரிப்பான நியூஸ் ஹண்ட் (Newshunt), தமிழ் உள்ளிட்ட வட்டார மொழிகளில் வெளிவரும் செய்திதாட்களை படிக்க மிகவும் பயனுள்ள ஒரு மென்பொருள். இது பல்வேறு கைபேசி இயங்குதளங்களை ஆதரிக்கும் வண்ணம் உருவாக்ப்பட்டுள்ளது. 

ஜாவா, நோக்கியா OVI, ஆப்பிள், பிளாக் பெர்ரி, விண்டோஸ் மொபைல் என அனைத்து வகை கைபேசி இயங்குதளத்திற்கும் கிடைக்கிறது.

GPRS / 3G / Wifi இணைப்பின் மூலம் இணையதளத்திலுருந்து தகவல் பதிவிறக்கப்பட்டு காண்பிக்கப்படுகிறது.

தகவல் தரவிறக்க அளவை குறைக்க படங்களை தவிர்க்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழில் தற்போது தினமலர், தினமணி, தினகரன், பி.பி.சி. தமிழ், சினிமா எக்ஸ்பிரஸ் ஆகிய பதிப்புகள் வெளிவருகின்றன.

மொத்தம், 11 மொழிகளில் 85 க்கும் மேற்பட்ட படிப்புகளை இதில் காணலாம்.

 இதில் வேலை வாய்ப்பு தேடலுக்கும் தனி பிரிவு உள்ளது.

 

 

Category
Tags